சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவு விநியோகித்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.