காலி முகத்திடலில் இடம்பெறும் கலவரத்தை முன்கூட்டியே தடுக்குமாறு ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்திருந்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பாதுகாப்பு அதிகாரிகளும், இரண்டு நீர்த்தாரை விநியோக பௌசர்களும் காலிமுகத்திடலுக்கு வரவழைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் எவ்வித பணிப்புரையை வழங்கினாலும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ள வேண்டாம் என கடைசி நேரத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் தன்னிடமும் ஏனைய உயர் அதிகாரிகளிடமும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்டோர் பொலிஸ் உத்தியோகத்தர்களை மீறி காலி முகத்திடலுக்குள் பிரவேசித்ததாகவும், ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றியிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.