எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது.
இதன்போது பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.