உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளது.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையின் பணவீக்கம் 132 சதவீதமாக பதவாகியுள்ளது.
இந்த பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.
1884 முதல் 1950 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை நாணயச் சபையொன்றை நியமித்தது.
அவ்வாறான நடவடிக்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தற்போது கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

