Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇரட்டை சதத்தை தவறவிட்டார் அஞ்சலோ மெத்யூஸ்

இரட்டை சதத்தை தவறவிட்டார் அஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், அஞ்சலோ மெத்யூஸ் தமது 12ஆவது சதத்தினை பூர்த்தி செய்து 199 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

அத்துடன், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles