கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட மருத்துவ விடுமுறை வழங்க ஸ்பானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் பரிந்துரையின்படி விடுமுறையை 5 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.
இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த நாட்டின் புதிய சட்டங்களுக்கு ஏற்ப ஸ்பானிய அரசு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு விசேட விடுமுறை