கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை அடுத்து, சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கும், தீவைப்பதற்கும் நபர்களை ஒருங்கிணைத்த 59 சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் பல கணக்குகளில் இடப்பட்ட பதிவுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.