வடகொரியாவில் முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இதனை அறிவித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரொன் தொற்றிருப்பது உறுதியானது.
முதல் கொவிட் தொற்றாளர் கண்டறியப்பட்டதை அடுத்து, வடகொரிய ஜனாதிபதிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கொவிட் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
#ரொய்ட்டர்ஸ்