நாளை (13) பொலிஸ் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை கொழும்பு நகர எல்லைக்கு 15,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
பொலிஸாரின் தலையீட்டில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களை பலவந்தமாக எடுத்துச் சென்ற சம்பவம் பதிவானது.
#லங்காதீப