எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாளை(13) மற்றும் நாளை மறுதினம் (14) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும், நாளை காலை 6 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு அமுலாகும் நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.