Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட தீவு

ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட தீவு

1500 ஏக்கர் நிலப்பரப்பிலும் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கும் கல்பிட்டி தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சமுனி தீவு, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

சுவிஸ் நிறுவனமொன்றுக்கு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று (11) சுற்றுலா அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக அகில இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவு 2022 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகைக்கு ரூ.1000.000க்கு எவ்வாறு விற்கப்படும் என அகில இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் கேட்கிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து நாணயத்தின் மதிப்பு வியத்தகு முறையில் மாறியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த தீவில் எந்த கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது தெரியவில்லை.

எந்தவொரு கட்டுமானமும் செய்யப்படுவதற்கு முன்னர் தேவையான EIA (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) சான்றிதழும் பெறப்படவில்லை என அகில இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் கூறுகிறது.

அமைச்சரவை இல்லாத நிலையில், பிரதமரும் அமைச்சரவையும் செயற்படாத நிலையில், யாருடைய நலனுக்காக இவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன என்பதை ஆராய வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles