இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குசென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும்.
அத்துடன், இவ்வருடம் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.