இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்படி இந்த ஐபிஎல் தொடரின் பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சு பெறுதியை வனிந்து ஹசரங்க பதிவு செய்துள்ளார்.
ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.