அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று முற்பகல் 9 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து, அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே, மக்கள் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கு” என கோஷம் எழுப்பி, வைத்தியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என சகலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.