இந்தியாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் எரிவாயுவை பெற்றுக் கொண்டால் சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இருந்து சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிவாயுவை இறக்குமதி செய்வதே தற்போது சிறந்த முடிவாகும் ன அவர் மேலும் தெரிவித்தார்.