Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹர்தாலில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் விசேட அறிவிப்பு

ஹர்தாலில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் விசேட அறிவிப்பு

இன்று முன்னெடுக்கப்படும் ஹர்தால் குறித்து, காவல்துறை ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர், அஜித் ரோஹண இந்த அறிவிறுத்தலை விடுத்துள்ளார்.

காவல்துறை அறிவித்தலில் உள்ளடங்கும் விடயங்கள்:

போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது.

நிர்வாக முடக்கல் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தினம், நாடளாவிய ரீதியில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும், கலகம் விளைவிக்கும் வகையில், செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, போராட்டத்தில், ஈடுபடுபவர்கள், அமைதியான முறையில் அதில் ஈடுபடவும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles