Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

அக்கரைப்பற்று – பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

7 காவல்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் இவ்வாறு காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றிரவுஇ கடமையில் இருந்த காவல்துறையினரால்இ பாதுகாப்பாற்ற முறையில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துவதற்கு சைகை காண்பிக்கப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் வழுக்கிச்சென்று விபத்துக்குள்ளானதில் அதனை செலுத்திய நபர் காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற சுமார் 700 பிரதேசவாசிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துஇ வீதித் தடையில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகளை தாக்கியதுடன்இ காவலரணுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அக்கரைப்பற்று காவல்நிலைய பொறுப்பதிகாரியும் பிரதேசவாசிகளின் தாக்குதலில் காயமடைந்ததுடன்இ நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழப்ப நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles