கதிர்காமம் பிரதேச சபையில் இன்று (06) பதற்ற நிலை ஏற்பட்டது.
கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மீது பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தலைவர் தரையில் விழுந்துள்ளதுடன், பின்னர் மற்றுமொரு உறுப்பினரால் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

