Saturday, May 16, 2026
26.7 C
Colombo
சினிமாஉலகப் புகழ்பெற்ற நடிகை மர்ம மரணம்

உலகப் புகழ்பெற்ற நடிகை மர்ம மரணம்

பிரபல அமெரிக்க நடிகை கைலியா போஸி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரான “டாட்லர்ஸ் & டியரஸ்” பங்கேற்று அவர் பிரபலமானார்.

இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப் (GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றார்.

16 வயதான அவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதுடன், அவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.

இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Kailia Posey: 16 வயதான உலக புகழ் பெற்ற நடிகை கைலியா போஸி மர்ம மரணம்:  அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - actress kailia posey passes away at 16 |  Samayam Tamil

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles