Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலி சப்ரி ரஹீம் MPயின் கார் மோதுண்டு ஒருவர் பலி

அலி சப்ரி ரஹீம் MPயின் கார் மோதுண்டு ஒருவர் பலி

புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் அந்த காரில் பயணித்துள்ளதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles