Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி அதிகரிப்பு தொடர்பில் அரசில் குழப்பநிலை

வரி அதிகரிப்பு தொடர்பில் அரசில் குழப்பநிலை

நடப்பு அரசாங்கம் முக்கியமான வரிகளை குறைத்தமை நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரிகளை மீண்டும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் வரியை அதிகரிப்பதானது, நாட்டில் மிக மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இதனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் கடுமையாக அதிகரிக்கும் என்பதோடு, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வருமானத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக வரியை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Keep exploring...

Related Articles