நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் (தியத்த பூங்காவுக்கு அருகில்) மூடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நாடாளுமன்றம் நோக்கி சென்றது.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவ்வீதியூடான வாகன போக்குவரத்தை முற்றாக தடை செய்யும் வகையில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
வீதித்தடைகளைப் பயன்படுத்தி காவல்துறையினரால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.