அண்மையில் மரணித்த ‘நெதுங்கமுவ ராஜா’ யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
நாட்டின் பிரதான விகாரைகள் பலவற்றில் பெரஹரா ஊர்வலங்களில் நெதுன்கமுவ ராஜா யானை பங்கேற்றுள்ளது.
அத்துடன், 13 தடவைகள் தலதா மாளிகையின் புனித பேழையை ஏந்திய சிறப்பு பெற்ற குறித்த யானை, கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தது.
தற்போது நெதுங்கமுவ ராஜாவின் உடலைப் பாதுகாப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.