Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த பிக்குமார்

ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த பிக்குமார்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள டச்சு வைத்தியசாலை வழியாகச் சென்ற குறித்த குழுவினர், மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத விதமான இந்த அத்துமீறலை குறித்த சந்தர்ப்பத்தில் கோட்டை ஆர்ப்பாட்டப்பகுதியை அண்மித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

தற்போது, அங்கு காவல்துறை கலகமடக்கும் பிரிவினர் மற்றும் தண்ணீதாரை பிரயோக வாகனங்கள் என்பன வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த திடீர் பிரவேசம் காரணமாக கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles