யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த 31 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கெப் ரக வாகனமும் , யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.