Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை வம்சாவளி வீராங்கனை சாதனை

இலங்கை வம்சாவளி வீராங்கனை சாதனை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய வீராங்கனையான ஜசிந்தா கலபொடஆரச்சி இரு விருதுகளை வென்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து நிபுணத்துவ கால்பந்து சம்மேளன விருதுகளில் சிறந்த இளம் கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும், 2022 ஆம் ஆண்டுக்கான செல்டிக் கால்பந்தாட்டக் கழகத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த ஜெசிந்தா, ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் மெல்பர்ன் சிட்டி ஸ்போர்ட்ஸ் க்ளப்பிற்காகவும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெர்த் குளோரி ஸ்போர்ட்ஸ் க்ளப்பிற்காகவும் விளையாடினார்.

அவர் 2019 மற்றும் 2020 இல் இங்கிலாந்தில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்காக விளையாடியதுடன், பின்னர் 2020/2021 இல் இத்தாலியில் நப்போலி கால்பந்தாட்ட க்ளப்புக்காவும் விளையாடினார்.

2021 ஆம் ஆண்டிலிருந்து அவர், ஸ்கொட்லாந்தின் செல்டிக் ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்காக விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles