பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் – வேலணை, வென்புரி ஊடாக தமிழகம் செல்ல முயன்ற சிறுவன் உட்பட நால்வர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
