இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஹொலிவுட் நடிகரான வில் ஸ்மித்தை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள அவர், ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ஹொலிவூட்டின் முன்னணி நடிகரான வில் ஸ்மித்தைச் சந்தித்துள்ளார்.
இது தொடர்பான படங்களை அவர் தனது சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், இசையிலும் அதிக ஆர்வம் உடையவர் என்பதால், சென்னையில் டிசம்பர் மாதம் நடைபெறும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.