Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிரிஹானை சம்பவம்: 15 பேர் CID முன்னிலையில்

மிரிஹானை சம்பவம்: 15 பேர் CID முன்னிலையில்

மிரிஹான சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 15 பேர் இன்று (02) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி, மார்ச் 31 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானவில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதன்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக 54 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதன்படி, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles