Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆவா குழுவின் 16 உறுப்பினர்கள் கைது

ஆவா குழுவின் 16 உறுப்பினர்கள் கைது

வவுனியா – ஓமந்தை – கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோத குழுவின் 16 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவின் உறுப்பினர்கள் விருந்து நிகழ்வொன்றை நடாத்தவிருப்பதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 15 பேர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என ஒமந்தை காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles