இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நாட்டில் மூன்று நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் இருப்பதாக அறிய முடிகிறது.
இலங்கை அரசாங்கம், IMF இடம் கடன் கோரியிருந்தாலும், அந்த தொகை கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது 1.7 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றில் 150 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால் அடுத்த 3 தினங்களுக்குப் பின்னர் இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.