அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்து வருகிறது.
அதில் இதுவரை 125 பேர் கைச்சாத்திட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.