Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்

இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles