Monday, May 18, 2026
31.7 C
Colombo
அரசியல்இடைக்கால அரசாங்கம்: ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்

இடைக்கால அரசாங்கம்: ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்

புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (29)நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் 11 சுயாதீன கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதற்காக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகாமல் இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles