சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தங்களுடைய சேமிப்பு நிதியை , தொற்றுநோய் மற்றும் தற்போதைய சிரமங்களை சமாளிக்க முடியாமல் உள்ள சிறார்களுக்கு உதவும் முகமாக வழங்குவதாக சீன சிறார்கள் தெரிவித்துள்ளனர்.