இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 517.5 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பற்றாக்குறையாகவுள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேஷிய தூதுவர் டெவி கஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்டவுள்ள 3.1 மெட்ரிக் டன் அளவுடைய மருத்துவ பொருட்கள், இரண்டு கட்டங்களாக நாளை மற்றும் எதிர்வரும் மே 8 ஆம் திகதி ஆகிய தினங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மூலம் ஜகர்தாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.