பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஒலி மாசுபாட்டிற்கு எதிரான தேசிய கூட்டமைப்பு இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 27) காலை முதல் அங்கு பிரித் சத்தமாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒலிபெருக்கிகளை பொருத்துவதற்கு காவல்நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது இலங்கையின் உயர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும் என அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.