Thursday, March 13, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசுக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம்

அரசுக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய ரீதியாக இன்று 1000க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஆசிரியர், ரயில்சேவை, சுங்கம், சுகாதார சேவைகள், வர்த்தகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் என்பன இதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

ஆசிரிய – அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்களின் வரவும் குறைவடைந்துள்ளது.

போக்குவரத்து வழமைப்போல இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரச, தனியார் பேருந்து வழமை போன்று சேவையில் இருந்தாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்களுக்கான மரக்கறி விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

வீதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமானம் என்பன வழமை போன்று இயங்குவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles