பேலியகொட – பெதியாகொட பிரதேசத்தில் நேற்று (25) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தகரொருவரை குறி வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பேலியகொட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.