அமெரிக்காவின் உப ஜனாதிபதியான கமலா ஹாரிசுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
57 வயதான அவர் கொவிட் தொற்று உறுதி செய்யப்படும் முன், பல தடவைகள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கமலா ஹாரிசுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு கொவிட் பரிசோதனைகளிலும், அவருக்கு தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து அவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.