Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்உணவுத் தட்டுப்பாடு 2024 வரை நீடிக்குமாம்

உணவுத் தட்டுப்பாடு 2024 வரை நீடிக்குமாம்

ரஷ்யா – யுக்ரைன் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு வரை உணவுத் தட்டுப்பாடு காணப்படலாம் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகில் மிகப் பெரிய அளவிலான உணவுத் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடி மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

உலகில் பாரிய அளவில் இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதி செய்யும் நாடாகவும், இரண்டாவதாக பாரிய அளவில் எரிபொருள் விநியோகிக்கும் நாடாகவும் ரஷ்யா காணப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி யுக்ரைனுடனான போருக்கு பின்னர் ரஷ்யாவின் ஏற்றுமதி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles