அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இதனை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.