ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று (25) கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கோப் குழுவின் முன்னிலையில் இவ்வாறு அந்நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஏல நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக கோப் முன்னிலையில் அழைக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில், கடந்த 21 ஆம் திகதி அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.