Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்

பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் எல்லையோர பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

அண்மையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்தனர். இதில் 2 குழந்தைகள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் தெரிவிக்கையில், நாங்கள் உலகளாவிய ரீதியாகவும் அண்டை நாடுகளிடமிருந்தும் பிரச்சினை மற்றும் சவால்களை எதிர்கொள்கிறோம்.

குனார்வில் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேசிய நலன்கள் காரணமாக அந்த தாக்குதலை பொறுத்துக் கொண்டோம். ஆனால் அடுத்தமுறை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles