சந்தையில், சவர்க்காரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் ஒன்று தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குழந்தைகளுக்கான சவர்க்காரம் ஒன்று 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சவர்க்காரங்கள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், சில சிறப்பு அங்காடிகளில் சவர்க்காரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.