Monday, May 5, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டால் எதிர்காலத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சித் தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அந்த பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்தியாஸ் பாகீர் மாகரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles