இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சாம்பியனான கௌசல்யா மதுஷானி காலமானார்.
26 வயதான குறித்த பெண் தும்மல சூரியவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற 100வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 2022ல், சிறந்த தடைதாண்டல் வீராங்கனைக்கான குளுக்கோலின் சவால் கிண்ணத்தை கௌசல்யா வென்றமை குறிப்பிடத்தக்கது.