இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளது.
மேலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கினால், அதுவும் ஊழல் செய்யப்படும்.
எனவே பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கம் ஒன்று உருவானதன் பின்னர் அதன் ஊடாக உதவிகளை வழங்குங்கள்.