Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுகலிடம் கோரி மேலும் 18 பேர் தமிழகம் சென்றனர்

புகலிடம் கோரி மேலும் 18 பேர் தமிழகம் சென்றனர்

இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம்கோரி சென்றுள்ளனர்.

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை  படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவரும் தமிழகம் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்கனவே 42 பேர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles