Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்சக பயணியை சராமாரியாக தாக்கிய மைக் டைசன் (Video)

சக பயணியை சராமாரியாக தாக்கிய மைக் டைசன் (Video)

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக் டைசன் பயணித்த விமானத்தில் அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மைக் டைசனுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதை அடுத்து, கோபமடைந்த அவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சக பயணிகள் கூறுகையில், மைக் டைசன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொந்தரவு செய்யும்படி காதில் கத்தியபடியே இருந்தார். இதனால் டைசன் அவரை தாக்கினார். பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன் மைக் டைசன் விமானத்தில் இருந்து வெளியேறினார் என தெரிவித்தனர்.

மைக் டைசன் ஏற்கனவே அவருடைய வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர்போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles